Advertisement

உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்ட இளநீர்!!!

By: Nagaraj Sat, 21 Oct 2023 4:37:01 PM

உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்ட இளநீர்!!!

சென்னை: இளநீரில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்... சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புக்கள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் அடங்கி உள்ளன. இத்தனை சத்துக்கள் இருக்கு. அதோட மருத்துவ குணங்களும் இருக்கு என்பதை தெரிந்து கொள்ளுங்கள.

டெய்லி இளநீர் குடித்து வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். இளநீரில் உள்ள சத்துக்கள் இளமையாக வைத்திருக்கும். கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடும். இதனால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும்.

youth,diabetics,youth,medicine,health ,இளநீர், சர்க்கரை நோயாளிகள், இளமை, மருத்துவக்குணங்கள், ஆரோக்கியம்

இதற்கு முக்கியமான காரணம் உப்பு முழுமையாக வெளியேறுவதுதான். இதனால்தான் கோடைகாலத்தில் இளநீரில் உள்ள உப்புச்சத்து நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராக பாதுகாப்பதோடு மட்டுமின்றி உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி சரிவர வெளியே தள்ளுகிறது. இதனால் கோடையில் வரும் அவசர வேனல் பிடிப்பு, வேனல் அயர்ச்சி போன்ற தொந்தரவுகளும் காணாமல் போய்விடும். ஆரோக்கியம் உயர்ந்து நிற்கும்.

இளநீரை பொறுத்தவரை உடனே குடிப்பதுதான் சிறந்தது. அதை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. இப்படி செய்வதால் இயற்கையாகவே இளநீரில் உள்ள மருத்துவ குணங்கள் மாறிவிடும். அதனால்தான் இளநீரை உடனடியாக பயன்படுத்த வேண்டும்.

இளநீரில் வேறு எதையும் கலந்து குடிக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள் இளநீரை குறைவாக குடிக்க வேண்டும். சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் இளநீரை குடிக்கக்கூடாது.

Tags :
|
|