Advertisement

தர்பூசணி விதைகளில் கூட இவ்வளவு நன்மைகளா?

By: Monisha Thu, 04 June 2020 12:52:39 PM

தர்பூசணி விதைகளில் கூட இவ்வளவு நன்மைகளா?

தர்பூசணி விதைகளில் மெக்னீசியம் இருப்பதால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க தர்பூசணி விதைகள் பயன்படுகிறது.

தாமிரம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் தர்பூசணி விதையில் இருப்பதால் அவற்றை உண்பதால் உங்கள் எலும்புகள் வலிமையாகும். இந்த தாதுக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகின்றன.

இதில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் தர்பூசணி விதையில் அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளன.

watermelon seeds,health,high blood pressure,minerals,antioxidants ,தர்பூசணி விதைகள்,ஆரோக்கியம்,உயர் இரத்த அழுத்தம்,தாதுக்கள்,ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

தர்பூசணி விதைகளை உண்பதால் நம்முடைய தோலுக்கும், முடிக்கும் அது நன்மை கொடுக்கிறது. அதில் உள்ள புரதங்களும், இரும்பு சத்தும் முடியின் தரத்தை மேம்படுத்துகிறது. தர்பூசணி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது.

முதலில் விதைகளை தர்பூசணி பழத்திலிருந்து எடுத்து வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் அவற்றை வறுத்து காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும். பின்னர் ஸ்நாக்ஸ் போல அவற்றை உண்ணலாம். இந்த வறுத்த தர்பூசணி விதைகளை சாலட்களிலும் பயன்படுத்தலாம். மேலும் அதை தூளாக்கியும் உணவில் தூவி சாப்பிடலாம்.

Tags :
|