Advertisement

சர்க்கரை நோய் ஏற்படுவதை குறைக்கும் வாழைக்காய்

By: Karunakaran Sun, 21 June 2020 1:05:00 PM

சர்க்கரை நோய் ஏற்படுவதை குறைக்கும் வாழைக்காய்

கிராம புறங்களில் சர்க்கரை நோய் குறைவாக காணப்படுவதன் காரணமே அங்கு வாழைக்காய், அவரைக்காய், பீர்க்கை, புடலை போன்ற காய்கறிகள் அதிக புழக்கத்தில் இருப்பதால் தான். வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் உள்ள ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கும்.

வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்ததால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்தப்படும். தினமும் காலையில் மலம் கழிப்பது உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு ஆரோக்கிய அறிகுறியாகும். வாழைக்காயில் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருப்பதால், இது குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்தும்.

diabetes,banana,constipation,diabetic patient ,வாழைக்காய்,சர்க்கரை நோய்,மலச்சிக்கல்,நீரிழிவு நோயாளி

மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் சாப்பிடுவதால் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றம் அடையும். குறிப்பாக வாழைக்காய் அதிக நார் சத்து கொண்டதால், ஜீரண கோளாறு மற்றும் குடல் பிரச்சினைக்கு பெரிதும் உதவும்.மேலும் இதில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதயத்திற்கு நல்லது.

இதன் நார்சத்து, எடை குறைப்பிற்கு நன்கு உதவுகிறது. இது உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க வல்லது. இது நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்ததாகும். சிறுநீரக செயல்பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது. மேலும் வாழைக்காயில் வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்துள்ளது.

Tags :
|