Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இதயத்தைக் காக்கும் அற்புத உணவான காளான் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!

இதயத்தைக் காக்கும் அற்புத உணவான காளான் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!

By: Monisha Wed, 17 June 2020 3:19:08 PM

இதயத்தைக் காக்கும் அற்புத உணவான காளான் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!

காளான் ஒரு சுவைமிகுந்த உணவாகும். இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளானில் மிகுந்துள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு சீராக செயல்படுகிறது.

mushroom,health,nutrients,high blood pressure,cholesterol ,காளான்,ஆரோக்கியம்,சத்துக்கள்,உயர் இரத்த அழுத்தம்,கொழுப்பு

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத் தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுகிறது. தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

Tags :
|