Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே நாளில் 4 நீண்ட தூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்தது வடகொரியா

ஒரே நாளில் 4 நீண்ட தூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்தது வடகொரியா

By: Nagaraj Sat, 25 Feb 2023 7:29:46 PM

ஒரே நாளில் 4 நீண்ட தூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்தது வடகொரியா

சியோல்: ஒரே நாளில் 4 நீண்ட தூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்து வடகொரியா உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

கிழக்காசிய நாடான வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை விரும்பாத அமெரிக்கா, அணு ஆயுதங்களை கைவிடுமாறு வடகொரியா மீது பல்வேறு வடிவங்களில் அழுத்தம் கொடுத்து வருகிறது.

அந்த பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அணு ஆயுதங்களை கைவிடுமாறு கூறுகிறது அதையெல்லாம் மீறி வடகொரியா அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் ஐ.நா.வில் மிரட்டியது.

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்காவும் தென்கொரியாவும் கடந்த வாரம் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அறிவித்தன.

exercises,japan,nuclear,weapon, ,அச்சுறுத்தல், ஆயுதம், ஏவுகணை, வடகொரியா

இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா, இரு நாடுகளும் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கினால், இதுவரை இல்லாத வகையில் கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் இடைவிடாத ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது. ஒரே நாளில் 4 ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவத்தினர் நேற்று வாஷிங்டனில் கணினி மயமாக்கப்பட்ட கூட்டுப் பயிற்சியை தொடங்கினர்.

இதன் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் 4 நீண்ட தூர ஏவுகணைகளை அடுத்தடுத்து சோதனை செய்து வடகொரியா அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள கிம் சேக் நகரில் இருந்து கொரியா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள கடலை நோக்கி நான்கு ஹவாசல்-2 ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வளர்ந்து வரும் பொருளாதார மந்தநிலை மற்றும் உணவு பற்றாக்குறைக்கு மத்தியில் வட கொரியாவின் அதிகரித்த ஏவுகணை சோதனைகளுக்கு தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|