Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா கொடியேற்றம்

பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா கொடியேற்றம்

By: Nagaraj Sun, 30 Aug 2020 12:34:35 PM

பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா கொடியேற்றம்

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், பக்தர்கள் இன்றி ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உள்ள, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், ஆண்டு திருவிழா, ஆக., 29ல் துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடைபெறும். பல ஆயிரம் பக்தர்களின், 'மரியே வாழ்க' என்ற விண்ணை பிளக்கும் கோஷத்துடன் கொடியேற்றப்பட்டு, விழா துவங்கும்.

கொரோனா காரணமாக, மார்ச், 20 முதல் தேவாலயம் மூடப்பட்டுள்ள நிலையில், கொடியேற்ற நிகழ்வில் 30 பாதிரியார்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. நேற்று மாலை 4:30 மணிக்கு, தேவாலய முகப்பிலிருந்து, கொடி பவனி புறப்பட்டு, தேவாலய வளாகத்தை வலம் வந்து 5 மணிக்கு தேவாலயத்தை அடைந்தது.

velankanni,pathayathri,devotees,flag hoisting ,வேளாங்கண்ணி, பாதயாத்திரை, பக்தர்கள், கொடியேற்றம்

தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்த பின், கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில், தேவாலயத்தில் தினமும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெறும். நிகழ்ச்சிகளை பக்தர்கள், 'ஆன்லைன்' வழியாக தரிசனம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

விழாவிற்கு பக்தர்கள் வருகையை தடுக்க மாவட்டத்தில், 21 இடங்களில் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து, கண்காணித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

Tags :