Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • தனிக்குடித்தனம் பெருகி விட்டதால் உறவுகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்

தனிக்குடித்தனம் பெருகி விட்டதால் உறவுகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்

By: Karunakaran Sun, 08 Nov 2020 11:02:36 AM

தனிக்குடித்தனம் பெருகி விட்டதால் உறவுகள் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்

இன்று பொருளாதார சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் தனிக்குடித்தன முறை தவிர்க்க முடியாததாகி விட்டது. கூட்டுக்குடும்ப முறையில் குழந்தைகளை பராமரிக்கவும், நீதிக்கதைகளை கூறி நல்வழிப்படுத்தவும் தாத்தா-பாட்டி, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா போன்ற உறவு முறைகள் இருந்தன. தற்போது தனிக்குடித்தனம் பெருகி விட்ட சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவிக்கின்றனர்.

தனிக்குடித்தனத்தில் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கும் பொறுப்பு பெற்றோரை மட்டுமே முழுவதும் சார்ந்துள்ளது. தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகள் மன அழுத்த நோய்கோ, தவறான பழக்க வழக்கங்களுக்கோ அடிமையாகும் வாய்ப்பு அதிகம். இதனால் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து வளர்க்கும் பெரும் பொறுப்பு தாய்க்கு உள்ளது.

children,relationships,monogamy,family ,குழந்தைகள், உறவுகள், ஒற்றுமை, குடும்பம்

வேலைக்கு செல்லும் பெண்கள் அலுவகத்தில் தங்களது வளர்ச்சியையும், குடும்ப பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் கவனிக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனாலும் ஒரே நேரத்தில் இரண்டு குதிரையிலும் சவாரி செய்து வெற்றி மங்கைகளாக வலம் வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் நேரத்தை குழந்தைகளுக்காகவும் ஒதுக்க வேண்டும். இதே நேரத்தில் குழந்தைகளுக்கு பிடிக்காத விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருக்க கூடாது. அவர்களது குறைகளை பரிச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்.

உங்களிடம் உள்ள பயத்தின் காரணமாகவே குழந்தைகள் உண்மையை மறைக்க நினைக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். தாயை கண்டு பயப்படும் குழந்தைகள் உண்மையை மறைக்கவே செய்யும். வீட்டிற்கு விருந்தினரோ, உறவினரோ வந்தால் அவர்களுக்கு என்ன தேவை என்பதை கவனிக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகள் பிறந்த நாளை மறக்காமல் நினைவில் வைத்து கொண்டாட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகளுடனான உறவு மேம்படும். பள்ளியில் நடக்கும் விழாக்கள் போன்றவற்றிற்கு குழந்தைகளுடன் கட்டாயம் செல்லுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் எந்த ஒரு நிமிடத்தையும் இழந்து விடாதீர்கள்.

Tags :