Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உங்கள் வீட்டில் வயதான நீரிழிவு நோயாளிகள் உள்ளனரா; கண்ணும் கருத்துமாக பாதுகாப்பு அளியுங்கள்

உங்கள் வீட்டில் வயதான நீரிழிவு நோயாளிகள் உள்ளனரா; கண்ணும் கருத்துமாக பாதுகாப்பு அளியுங்கள்

By: Nagaraj Mon, 22 June 2020 10:03:57 PM

உங்கள் வீட்டில் வயதான நீரிழிவு நோயாளிகள் உள்ளனரா; கண்ணும் கருத்துமாக பாதுகாப்பு அளியுங்கள்

உங்கள் வீட்டில் வயதான பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளனரா. அவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது உங்கள் தலையாய கடமையாகும்.

பொதுவாக எலும்பு முறிவு பிரச்சனை வயதான காலத்தில் ஏற்படும் ஒரு சிக்கலாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த எலும்பு முறிவைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்த போது தான் நீரிழிவு நோயாளிகள் இந்த எலும்பு முறிவு பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைக் காட்டிலும் இடுப்பு மற்றும் முதுகெலும்பு முறிவிற்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டைப் -1 நீரிழிவு நோயாளிகளுடன் டைப் -2 நீரிழிவு நோயாளிகளை ஒப்பிடுகையில் அதிக ஆபத்து உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

diabetes,sickness,aging,health,high concern ,நீரிழிவு, நோயாளிகள், வயதானவர்கள், உடல்நலன், அதிக அக்கறை

இதற்கு முக்கிய காரணமாக நோயாளியின் இன்சுலின் அளவு மற்றும் நோய்வாய்ப்பட்ட நேரம் இவற்றை பொருத்து அபாயமானது தீர்மானிக்கப்படுகிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு முறிவுகளைத் தடுக்க அவர்களுக்கு அது குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக கீழே விழுவதைத் தடுப்பது தேவையில்லாமல் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவதை தடுக்கும். மேலும் நீரிழிவு நோயால் சிறுநீரக பிரச்சனைகள், கண்பார்வை இழப்பு, கால்களில் பிரச்சனைகள், நரம்பு பாதிப்பு போன்ற பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.

சர்க்கரை நோயாளிகள் எலும்பு முறிவு சின்னதாக இருந்தால் கூட உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் அதை அப்படியே விடும் போது எலும்பு முறிவு பிரச்சனை தீவிரமாக வாய்ப்பு உள்ளது.

எனவே பெற்றோர்களாக இருந்தாலும் சரி, உறவினர்களாக இருந்தாலும் சரி அவர்களின் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துங்கள்.

Tags :
|
|