Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உங்கள் காதலி உங்களை கவனிக்க மறுக்கிறாரா? இதை முயற்சி பண்ணுங்க!

உங்கள் காதலி உங்களை கவனிக்க மறுக்கிறாரா? இதை முயற்சி பண்ணுங்க!

By: Monisha Sat, 10 Oct 2020 1:31:03 PM

உங்கள் காதலி உங்களை கவனிக்க மறுக்கிறாரா? இதை முயற்சி பண்ணுங்க!

நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் உங்கள் காதலி உங்களை கவனிக்க மறுக்கிறாரா? அப்படி என்றால் நீங்கள் தவறான முயற்சியை மேற்கொண்டு உள்ளீர்கள். ஒரு பெண்ணை கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவு உங்களுக்கு கற்றுத்தரும்.

பெண்கள் ஆண்களிடம் கவனிக்கக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்கள் தலைமுடி மற்றும் தாடி. நீங்கள் தாடி மற்றும் மீசை வளர்த்துக் கொண்டிருந்தால் அதனை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மேலும் உங்கள் தலைமுடி சரியான நீளத்தில் இருக்க வேண்டும். நீளமான முடி உங்களுக்கு இருந்தால் அதனை சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். மேலும் உங்கள் தலைமுடி கலைந்திருக்காமல் அவ்வப்போது முடியை சீப்பு கொண்டு சீவ வேண்டும்.

girlfriend,women,hair,hands,clothes ,காதலி,பெண்கள்,தலைமுடி,கைகள்,ஆடைகள்

பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் மற்றொரு முக்கிய பகுதி கைகள். ஆம்! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை! பெண்கள் ஆண்களின் கைகளை அடிக்கடி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆகவே கைகளில் உள்ள நகத்தை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் சருமம் பற்றிய மிகுந்த கவனிப்பும் கொண்டிருக்க வேண்டும். கைகளை வறட்சியோடு வைத்திருக்கக் கூடாது. அடிக்கடி கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது நல்லது.

ஒரு பெண்ணை கவர முக்கியமான முதல் விஷயம் நீங்கள் உடுத்தும் ஆடைகள். பொதுவாக ஆடைகள் எளிதில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆகவே உடை உடுத்தும் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம் இது. அதற்காக விலையுயர்ந்த ஆடைகள் வாங்கி அணிய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உடுத்தும் உடைகளை சரியான மேட்சிங் செய்து உடுத்துவதன் மூலம் உங்கள் அழகை மேம்படுத்த முடியும். சரியான மேட்சிங் ஆடைகளின் மூலம் மற்றவர்கள் கவனத்தை உங்களால் எளிதில் பெற முடியும். கூடுதலாக சுத்தமான ஆடை அணிவதும் மிகவும் அவசியம்.

girlfriend,women,hair,hands,clothes ,காதலி,பெண்கள்,தலைமுடி,கைகள்,ஆடைகள்

பெண்கள் ஆண்களில் கவனிக்கக்கூடிய மற்றொரு அம்சம் கட்டுக்கோப்பான உடல். பொதுவாக பெண்கள் பிட்னஸ் பிரியர்கள் என்றும் கூறலாம். ஆகவே ஆரோக்கியமான எடையை நீங்கள் நிர்வகிப்பது நல்லது. சரியான உடல் எடை மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆகவே ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இதனால் உங்களுக்கு பிடித்தமானவர்களை எளிதில் கவரவும் முடியும்.

நீங்கள் பார்க்கும் பார்வை, உடுத்தும் உடை மட்டுமில்லாமல் நீங்கள் பேசும் மொழியும் மற்றவர்கள் உங்களை கவனிக்கத் தூண்டும் ஒரு அம்சமாக உள்ளது. நீங்கள் பேசும் முறை, நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை போன்றவை ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. 'நான் ரொம்ப கூல்' என்ற அடிப்படையில் அதிக சீன் போட முயற்சிப்பது பெருத்த பாதிப்பை உண்டாக்க முடியும். அதனால் அமைதியாக இருந்து, உங்களுக்கு இயற்கையாக எளிமையாக வரும் மொழியை பேசுவதால் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

Tags :
|
|
|