Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே முத்தம்

உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே முத்தம்

By: Karunakaran Tue, 25 Aug 2020 2:31:13 PM

உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே முத்தம்

உறவுகள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே முத்தம். முத்தம் என்றால் பொதுவாக தவறான கருதப்படுகிறது. இதனால் தயவுசெய்து அதை கொச்சைப்படுத்த வேண்டாம்.செல்லக்குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திலிருந்து காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம் வரை எல்லாமே அன்பின் ஊற்று தான்.

காதலர்கள் ஒருவர் மாறி ஒருவர் கொடுக்கும் முத்தம் உணர்ச்சிப்பெருக்கில் வெளிப்படுவது. இதனை வெறும் காமம் சார்ந்ததாக பார்க்கக்கூடாது. அரவணைப்பு, தொடுதல், வருடுதலுடன் கொடுக்கும் முத்தத்தால் உடலில் பல்வேறு ஆரோக்கியமான பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கவலையில் இருக்கும் ஒருவரின் கரம் பற்றியோ, இறுக அணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொன்னால் அவர்களது பாதி கவலைகள் பறந்துவிடும். அப்படித்தான் இந்த முத்தமும்.

kiss,expression,relationships,love ,முத்தம், வெளிப்பாடு, உறவுகள், காதல்

முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நெருக்கத்தால் மனதில் உள்ள கவலைகள் நீங்கிவிடும். குறிப்பாக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு முத்தம் ஒரு அற்புதமான மருந்து என்று சொல்லலாம். `பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் முத்தத்தின்போது தலைவலி, மன அழுத்தம் போன்றவை விலகும். தியானத்துக்கு ஈடானது முத்தம் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். முத்தம் கொடுப்பவருக்கும் முத்தம் பெறுபவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பெருக்கெடுக்கும். கூடவே நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

கன்னத்தில் முத்தமிடுவதைவிட இரு கன்னங்களையும் கைகளால் பற்றிக்கொண்டு பெண்ணின் நெற்றியில் முத்தம் கொடுப்பதே அன்பின் உச்சம். நம்பிக்கை அதிகரிக்கும் உதடு ஒட்டிக்கொண்டு முத்தமிடும்போது ஆக்சிடோசின் சுரப்பு அவர்களுக்கிடையே நல்லதொரு பிணைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தம்பதியருக்கு இது நல்ல பலன் தரும். குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிட்டுக்கொண்டால் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும். முத்தமிடுவது நல்லதுதான். ஆனால், உங்களுக்கு உரியவருக்கு முத்தமிடுங்கள். காதலியை முத்தமிடுவதில் தவறில்லை. அது எல்லை மீற வாய்ப்பு உள்ளது என்பதால் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. சத்தமின்றி முத்தமிடுங்கள்.

Tags :
|