Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • குழந்தைகள் இல்லாமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்!

குழந்தைகள் இல்லாமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்!

By: Monisha Tue, 03 Nov 2020 9:12:27 PM

குழந்தைகள் இல்லாமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்!

புதிதாக திருமணமான பெண்களிடத்தில் பார்ப்பவர்கள் எல்லாரும் கேட்க கூடிய முதல் விஷயம் உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? என்பது தான். சிலருக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் இருக்கும். அப்படி இல்லாமல் இருப்பதற்கு முக்கியமான காரணமாக கருதப்படும் சிலவற்றை தெரிந்துகொள்வோம்.

பொதுவாகவே திருமணமான ஏழு ஜோடிகளில் ஒருவருக்கு கருத்தரிக்க சிரமம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும் அண்டவிடுப்பின் போது சுமார் 84 சதவீத தம்பதிகள் ஒரு வருடத்திற்குள் இயற்கையாகவே கருத்தரிப்பதாவும் கூறுகின்றன. ஆனாலும் சுமார் 15 சதவீத தம்பதிகளை பாதிப்பதாக கூறப்படுகிறது.

பெண் மலட்டு தன்மை மற்றும் ஆண் மலட்டு தன்மை வயதுக்கு ஏற்ப மாறுகிறது. பொதுவாக பெண்களில் மலட்டு தன்மை 30 வயதுக்கு மேல் ஏற்படுகிறது. சிலருக்கு குடும்பத்தில் உள்ள குழப்பங்கள், வேலை பளு போன்ற சில காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது உங்கள் உங்கள் உறவைப் பாதிக்கும் அதுமட்டுமல்லாமல் அண்ட விடுப்பின் மற்றும் விந்து உற்பத்தியையும் பாதிக்கும்.

marriage,child,infertility,pregnant,couples ,திருமணம்,குழந்தை,மலட்டு தன்மை,கருத்தரிப்பு,தம்பதிகள்

ஆண்கள் பலரும் புகைபிடிக்கும் பழக்கத்தை உடையவராக இருப்பர். இது கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புகைபிடித்தல் ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பை பாதிக்கிறது. அதே நேரத்தில் ஆண்களில் விந்தின் தரம் குறைவதற்கும் இது முக்கிய காரணமாக இருக்கிறது.

அதிகமாக மது குடிப்பது ஆண்களின், விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும். இதனால் குழந்தை கிடைப்பதற்கு கூட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம். அதிக எடை கருவுறுதலைக் குறைக்கிறது. 30 வயதிற்கு மேற்பட்ட பி.எம்.ஐ இருப்பது கருவுறுதலைக் குறைக்கிறது. பெண்களுக்கு, அதிக எடை அல்லது எடை குறைவாக இருப்பது அண்டவிடுப்பை பாதிக்கும்.

ஆண்களுக்கு பூச்சிக்கொல்லிகள், கரைப்பான்கள் ஆகியவற்றின் மூலம் ஏதாவது பாதிப்புகள் இருந்தால் அவை கருவுறுதலை பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலுறவால் பரவும் பாலியல் நோய்த்தொற்றுகள் கருவுறுதலை பாதிக்கும்.

marriage,child,infertility,pregnant,couples ,திருமணம்,குழந்தை,மலட்டு தன்மை,கருத்தரிப்பு,தம்பதிகள்

கருப்பையில் இருந்து முட்டைகள் வெளியிடுவதை பாதிக்கும் ஹார்மோன் கோளாறுகள் உதாரணமாக ஹைப்பர் அல்லது ஹைப்போ தைராய்டிசம், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், ஹைப்பர் ப்ரோலாக்டினீமியா, சேதமடைந்த ஃபலோபியன் குழாய்கள், எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் ஆரம்ப மாதவிடாய் போன்றவை பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

விந்தணுக்களை கொடுப்பதில் ஏற்படும் சிக்கல்கள் உதாரணமாக அசாதாரண விந்து உற்பத்தி, முன்கூட்டிய விந்து வெளியேறுதல், மற்றும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற இரசாயனங்கள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் பாதிப்புகள். அதுமட்டுமல்லாமல் சிகரெட் பிடிப்பது, ஆல்கஹால், பாக்டீரியா தொற்றுக்கு மருந்துகளை உட்கொள்வது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை கருவுறுதலையும் பாதிக்கும். மேலும் அதிக உடல் வெப்பநிலை கூட விந்து உற்பத்தியை பாதிக்கும்.

Tags :
|