Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • தாம்பத்திய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம்

தாம்பத்திய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம்

By: Karunakaran Wed, 11 Nov 2020 4:37:01 PM

தாம்பத்திய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம்

தாம்பத்ய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்களிடம் அதற்கு தகுந்த விதத்தில் தெளிவு ஏற்படாததால் ஆண்கள் இப்போதும் அந்த விஷயத்தில் பழமைவாதிகளாகவே இருக்கிறார்கள். தான் சொல்வதைக் கேட்டு மனைவி நடந்துகொள்ளவேண்டும் என்று 72 சதவீத ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள், மனைவி தங்களை குழந்தை போன்று பராமரித்து பாசம் செலுத்தவேண்டும் என்ற 60 சதவீத ஆண்கள் எதிர்பார்ப்பை தெரிவித்திருக்கிறார்கள்.

சினிமா கதாநாயகர்கள் போன்றவர்களோ, கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போன்றவர்களோ கணவராக வேண்டும் என்று முன்பு தாங்கள் எதிர்பார்த்தது உண்மைதான் என்றும், இப்போது அப்படிப்பட்ட கனவுகள் காண்பதில்லை என்றும், சராசரி மனிதர்களையே கணவராக எதிர்பார்ப்பதாகவும் 81 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். தாம்பத்ய செயல்பாடுகளில் தங்களுக்கு முழுதிருப்தி ஏற்படுவதாக 38 சதவீத பெண்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த விஷயத்தில் கணவர் தங்களது கருத்துக்களை கேட்பதில்லை என்பது குறையாக இருக்கிறது.

change,women,marital matters,couples ,மாற்றம், பெண்கள், திருமண விஷயங்கள், தம்பதிகள்

நாங்கள் தாம்பத்ய செயல்பாட்டு விஷயத்தில் புதுமைகளுக்கு தயாராக இருக்கிறோம். ஆனால் கணவர்தான் அதில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை என்பது 22 சதவீத நடுத்தர வயது பெண்களின் கருத்தாக பதிவாகி இருக்கிறது. இந்த சர்வேயில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கணவன்மார்களிடம் பிடிக்காதவைகளை பற்றி பெண்கள் வெளிப்படையாக கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

தாம்பத்ய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆணும், பெண்ணும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து கணவன்- மனைவியாக வாழ்க்கையில் இணைகிறார்கள். அதனால் உடனேயே அவர்களுக்குள் ஐக்கியம் ஏற்பட்டுவிடாது. அதை புரிந்துகொண்டு படிப்படியாக நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இருவரும் முன்வரவேண்டும். அதற்கு அன்பும், நம்பிக்கையும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிப்பதும் மிக அவசியம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Tags :
|
|