Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தை மகிழ்ச்சி அடையுமா?

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தை மகிழ்ச்சி அடையுமா?

By: Monisha Thu, 27 Aug 2020 3:37:58 PM

இரண்டாவது குழந்தையின் வருகையில் உங்கள் முதல் குழந்தை மகிழ்ச்சி அடையுமா?

இரண்டாவது குழந்தையின் வருகை உங்களையும், துணையையும் உற்சாகத்தில் ஆழ்த்தலாம். ஆனால் இது உங்கள் முதல் குழந்தைக்கு கடினமாக அமையலாம். இரண்டாவது குழந்தையின் வருகை உங்கள் குடும்பத்தில் பல மாற்றங்களை கொண்டு வரலாம், உங்கள் மீதும், குறிப்பாக உங்கள் பெரிய குழந்தை மீது மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தலாம்.

என்னுடைய பெரிய குழந்தை புதிய குழந்தையின் வருகையை எப்படி எதிர்கொள்ளும்? மாறும் இந்த சூழல் பெரிய குழந்தைக்கு எவ்வளவு அழுதத்தை உண்டாக்கும்? போன்ற கேள்விகள் தான் பெற்றோர்களின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று. இத்தனை ஆண்டுகளாக, பெரிய குழந்தை தான் எல்லோர் கண்களிலும் முக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது கவனம் இடம்மாறி குறைந்து போகிறது. திடிரென கவனிப்பு இல்லாமல் போவதால் அந்த குழந்தை நேசிக்கப்படாமல், தேவையற்ற குழந்தையாகி போனதாக உணர்ந்து மூர்கம் கொள்ளலாம். கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த குழந்தை மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

child,parent,joy,impact,regression ,குழந்தை,பெற்றோர்,மகிழ்ச்சி,தாக்கம்,பின்னடைவு

புதிய குழந்தையின் வருகைய அடுத்து பெரிய குழந்தை திடிரென பின்னடைவை வெளிப்படுத்தலாம். உங்கள் குழந்தை கழிப்பறை பயிற்சியில் தடுமாறலாம் அல்லது பாட்டிலில் பால் கேட்கலாம். சில நேரங்களில், தன்னைச்சுற்றி நிகழும் மாற்றங்களால் வெறுப்படைந்த குழந்தை அதை புதிய குழந்தை மீதும் காண்பிக்க முற்படலாம். எனவே தான் புதிய குழந்தை வருகைக்கு பெரிய குழந்தையை தயார் செய்வது அவசியமாகிறது. குழந்தை இதுவரை எதிர்கொண்ட மாற்றங்களியே மிகவும் சிக்கலான ஒன்றாக இது அமையலாம். எனவே இதை உணர்வுபூர்வமாகவும், அன்பு மற்றும் உறுதி அளித்தலோடு அணுக வேண்டும்.

கர்ப்பம் உறுதியாகி, வயிறு வெளியே தெரியத்துவங்கியதும் குழந்தையிடம் இது பற்றி எடுத்துக்கூறுவது நல்லது. உங்கள் உடல் இன்னும் பழைய நிலையிலேயே இருக்கும் போது குழந்தையால் மாற்றத்தை புரிந்து கொள்வது கடினம். இருப்பினும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் சொல்லும் போதே குழந்தையிடமும் தெரிவிப்பது நல்லது. குழந்தையின் வயது என்னவாக இருந்தாலும் சரி இந்த தகவலை மற்றவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

child,parent,joy,impact,regression ,குழந்தை,பெற்றோர்,மகிழ்ச்சி,தாக்கம்,பின்னடைவு

கர்ப்ப காலம் முழுவதிலும் உங்கள் பெரிய குழந்தையையும் ஈடுபடுத்துங்கள். பெருக்கும் வயிறு குறித்து குழந்தையிடம் உற்சாகத்தை உருவாக்குங்கள். உன் வருங்கால சிறந்த தோழி/தோழன் என்பது போன்ற வார்த்தைகளை கூறுங்கள். அதிக நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஸ்கேன் செய்ய அழைத்துச்செல்வது பொருத்தமாக இருக்காது என்றாலும், ஸ்கேன் படத்தை (உருவம் தெரியத்துவங்கிய உடன்) வீட்டில் குழந்தையிடம் காண்பித்து எல்லாவற்றையும் விளக்கி கேள்விகளுக்கு பதில் சொல்வது சிறந்த முதல்படியாக இருக்கும்.

புதிய குழந்தைக்கு பொருட்கள் வாங்கும் போது பெரிய குழந்தையையும் அழைத்துச்சென்று ஆலோசனை கேளுங்கள். சிவப்பு நன்றாக இருக்குமா பச்சை நன்றாக இருக்குமா? , இந்த பொம்மை எப்படி இருக்கும் ? என கேளுங்கள். குழந்தை வயிற்றில் காலால் உதைப்பதை குழந்தை தொட்டு உணரட்டும். புதிய குழந்தையின் வருகையை எதிர்பார்ப்பதில் பெரிய குழந்தையையும் இணைத்துக்கொள்வதன் மூலம் அவர்கள் அந்நியமாக உணராமல் பார்த்துக்கொள்ளலாம்.

Tags :
|
|
|
|