ரேஷன் வழங்குவதில் புதிய மாற்றம்


சென்னை: கருவிழியை ஸ்கேன் செய்து அதன் மூலமாக ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு ..ரேஷன் கடைகளின் மூலமாக நுகர்வோர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது வரையிலும் விரல்ரேகை பதிவின் மூலமாகவே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு விரல் ரேகை பதிவாவதில்லை. ஆனாலும், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


இதற்கு இடையே, விரல் ரேகை பதிவாகாததை சாதகமாக பயன்படுத்தி ரேஷன் கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களையும் வாங்கியதாக காட்டி ரேஷன் கடை ஊழியர்கள் அந்த பொருட்களை இவர்கள் பெற்று கொள்கின்றனர்.

இதனால், மத்திய அரசு அதிரடியாக புதிய மாற்று நடவடிக்கையினை மேற்கொண்டு உள்ளது. அதாவது, இதற்கு பிறகு ரேஷன் கார்டுதாரர்களின் கருவிழி மூலமாகவே ஸ்கேன் செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இதன் மூலமாக, ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளும் தவிர்க்கப்படும்.