செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,276 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,242 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 47,749 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,242 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,276 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,650 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூலை 5-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.