பொறியியல் மாணவர் சேர்க்கைக்கையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் இருக்கின்றன. 2023-24ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

எனவே இதற்கான விண்ணப்பபதிவு கடந்த ஜூன் 4ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதன் பின்னர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வும் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.


இதையடுத்து முதலில் மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.

காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியிருக்கும் நிலையில் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று தொடங்கியிருக்கும் இந்த கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.