குழந்தை பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

01.01.2000க்கு முன் பிறந்த குழந்தையின் பெயரை பதிவு செய்ய தவறியவர்களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 31.12.2019ல் முடிந்த நிலையில் இந்திய தலைமை பதிவாளர் மேலும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் நலன் கருதி இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டதிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெயரை கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.

ஓராண்டுக்கு பின் 15 ஆண்டுகளுக்குள் குழந்தையின் பெயரை உரிய தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம். குழந்தையின் பெயரை பதிவு செயய விஏஓ, பேரூராட்சி செயல் அலுவலர், துப்புரவு-சுகாதார ஆய்வாளர்களை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.