இதுதாங்க பிரதமர் மோடியின் சொத்து: இணையத்தில் வெளியிடப்பட்ட தகவல்

புதுடில்லி: பிரதமரின் சொத்து விபரம்.... பிரதமர் மோடியின் மார்ச் 31ம் தேதி வரையிலான சொத்து விவரம் பிரதமர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது, ஒவ்வொரு ஆண்டும், பிரதமர் ,மத்திய அமைச்சர்களும் பொது வாழ்வில் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் ஒரு பகுதியாக தங்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்களை தாமாக முன்வந்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதன்படி தற்போது பிரதமர் மோடி ஆட்சியிலும், இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்த சொத்துக்கள் ,கடன்கள் குறித்த தகவல் அவரது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில் மார்ச் 31, 2023 நிலவரப்படி பிரதமர் மோடியின் பெயரில் ஆயுள் காப்பீட்டு இல்லை, அவருடைய வங்கிக் கணக்கில் இருப்பு ரூ. 574 மட்டுமே. பிரதமர் மோடி ஏற்கனவே ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருந்தார், அது முதிர்ச்சியடைந்தது அதனை நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தார்.

தவிர குஜராத் மாநிலத்தில் எஸ்.பி.ஐ., காந்திநகர் கிளையில் வைப்பு தொகை திட்டத்தில் ரூ. 2.47 கோடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மோடியிடம் வாகனங்கள் இல்லை, கடன்கள் இல்லை, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில்லை. காந்திநகரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் அவருக்கு ஒரே ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே இருந்தது.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இந்த எஸ்பிஐ வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறார், மேலும் பிரதமரின் வங்கி இருப்பு வெறும் ரூ.574 தான், இந்த ஆண்டு மார்ச் 31 வரை அவரிடம் ரூ.30,240 ரொக்கம் இருந்தது.