Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்

கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்

By: Nagaraj Thu, 30 June 2022 8:26:04 PM

கொழுப்பை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்

சென்னை: பீட்ரூட் நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது .பீட்ரூட் இரத்த சோகை மட்டுமில்லாமல் நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களையும் குணமாக்கும் மற்றும் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு .

பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ,நைட்ரேட் ,கால்சியம் ,காப்பர், செலினியம், ஜிங்க் ,இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கும்.

பீட்ரூட் இவ்வளவு சத்துக்கள் கொண்டது என்றாலும் அதை பலரும் பெரிதும் விரும்ப மாட்டார்கள் அப்படி சாப்பிட விரும்பாதவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்து வரலாம். இது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. அந்தவகையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

பீட்ரூட்டில் இருந்து பெறப்படும் ஒருவகை நார்ச்சத்து ஹைப்பர் கிளைசீமியாவைக் (இரத்த சர்க்கரை மிகைப்பு) கட்டுப்படுத்துகிறது. பீட்ரூட் சாறு உட்கொள்வதன் மூலம் உணவுக்குப் பிறகு உயரும் சர்க்கரை அளவு கிளைசீமியாவை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

beetroot,potassium,nerves,folic acid,important role ,பீட்ரூட், பொட்டாசியம், நரம்புகள், போலிக் அமிலம், முக்கிய பங்கு

ஒரு வாரத்திற்கு தொடர்சசியாக பீட்ரூட் சாறு எடுத்துக் கொள்ளும்போது, இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம். பீட்ரூட் ஜூஸ் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும் திறன் கொண்டுள்ளது.

உடல் சோர்வு, கவனமின்மை, எதிலும் ஆர்வமின்மை போன்றவைகளுக்கு வழிவகுக்கும் அனீமியாவை குணப்படுத்த பீட்ரூட்டை தினசரி எடுத்துக்கொள்ளும் போது இரத்த சோகையிலிருந்து மிக விரைவாக குணமடையலாம்.கலோரிகள் குறைவாகவும், கொழுப்பற்ற உணவுகளில் பீட்ரூட் முக்கியமான ஒன்றாகும். இதனால் கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் பீட்ரூட் சாற்றை அருந்தலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பீட்ரூட் சாறு, நன்மை பயக்கும். இதில் உள்ள ஃபோலிக் அமிலம் குழந்தையின் நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பீட்ரூட்டில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளதால் அதனை வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் தினமும் உணவில் எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். இல்லையெனில் வாரம் இரு முறையாவது கட்டாயம் எடுத்துக்கொள்வது நல்லது.

Tags :
|