Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நல்ல மருந்தாக விளங்கும் கொத்தமல்லி விதையின் பயன்கள்!

நல்ல மருந்தாக விளங்கும் கொத்தமல்லி விதையின் பயன்கள்!

By: Monisha Thu, 12 Nov 2020 12:52:48 PM

நல்ல மருந்தாக விளங்கும் கொத்தமல்லி விதையின் பயன்கள்!

கொத்தமல்லி விதையில் அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைப்பர். வைட்டமின் சி, பொட்டாசியம், மினரல் போன்றவை தனியாவில் மிகுதியாக அடங்கியிருக்கிறது.

இரைப்பை சார்ந்த பிரச்னைகளான அசிடிட்டி, உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாக கொத்தமல்லி விதை இருக்கிறது.

மல்லி விதையை தேநீராக தினமும் காலையில் அருந்தி வரலாம். இதன்மூலம் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுகிறது. வாயு மட்டுமல்லாது சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் முதலான பல நோய்களை போக்க வல்லது.

coriander seed,vitamin,potassium,mineral,health ,கொத்தமல்லி விதை,வைட்டமின்,பொட்டாசியம்,மினரல்,ஆரோக்கியம்

கொத்தமல்லி விதை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என பல்வேறு ஆராய்ச்சிகள் கூறுகிறது. மேலும் அலர்ஜி சார்ந்த பிரச்னைகள், உடல்வலி, மாதவிடாய் மற்றும் ஹைப்பர் டென்ஷன் பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. ஹார்மோன் சமநிலைக்கும் மல்லி விதை உதவி செய்கிறது.

நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் பாதிப்பு, ஆஸ்துமா, சளி தொந்தரவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கட்டாயம் தனியா டீ அருந்துவது நல்லது. அதுபோல முதியவர்கள் தினமும் தனியா தேநீர் அருந்துவது அவர்களுக்கு இருக்கக்கூடிய மூட்டுவலி, உடல் சோர்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை சரி செய்யும்.

Tags :