Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • தினமும் இரவு தூங்கும் முன் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

தினமும் இரவு தூங்கும் முன் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

By: Monisha Mon, 11 July 2022 9:26:34 PM

தினமும் இரவு தூங்கும் முன் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.

இரவு தூங்கும் முன்பு 2 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால், இன்னும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். அதுவும் 2 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்தால் இன்னும் நல்லது.இப்போது இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேரிச்சம் பழத்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகளவில் உள்ளன.இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது.பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.

dates,milk,calcium,potassium ,பேரிச்சம்  பழம்,  நன்மை,இரவு, பால்,

பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி எப்போதும் வலுவாக இருக்கும்.

பேரிச்சம் பழத்தை தினமும் தவறாமல் உட்கொண்டு வருவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பேரிச்சம் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் உள்ள கெட்ட கெழுப்புக்களை நீக்க உதவுகிறது.

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுவிக்கிறது.

Tags :
|
|