Advertisement

இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்யும் கருப்பட்டி!

By: Monisha Mon, 06 July 2020 4:29:03 PM

இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்யும் கருப்பட்டி!

பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் சத்து நிறைந்த பொருட்களுள் கருப்பட்டியும் ஒன்று. கருப்பட்டியில் பொட்டாசியம் சத்து அதிகளவில் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.

சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். இதில் அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது. கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.

health,nervous system,anemia,potassium,iron ,இதய ஆரோக்கியம்,நரம்பு மண்டலம்,ரத்த சோகை,பொட்டாசியம்,இரும்புச்சத்து

காலசூழலில் கருப்பட்டி பயன்பாடு குறைந்து விட்ட போதிலும் தற்போது மீண்டும் கருப்பட்டி பலகாரங்கள் பல கடைகளில் கிடைக்க ஆரம்பித்துள்ளன. கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம்.

கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.

இத்தகைய சத்து நிறைந்த கருப்பட்டியை இனிமேலும் தவறவிடாமல் சுவையான கருப்பட்டி காபி போட்டு சுவைத்து மகிழுங்கள்.

Tags :
|
|