Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • முளைகட்டிய தானியங்களில் நிறைந்துள்ள ஆரோக்கிய பலன்கள்!!

முளைகட்டிய தானியங்களில் நிறைந்துள்ள ஆரோக்கிய பலன்கள்!!

By: Monisha Sat, 20 June 2020 4:57:59 PM

முளைகட்டிய தானியங்களில் நிறைந்துள்ள ஆரோக்கிய பலன்கள்!!

முளைகட்டிய தானியங்கள் ஏராளமான ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன. முளைகட்டிய தானியங்களில் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் ன் நிறைந்து காணப்படுகிறது.

முளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம், கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துகொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது.

sprouted cereal,health,protein,potassium,iron ,முளைகட்டிய தானியம்,ஆரோக்கியம்,புரோட்டீன்,பொட்டாசியம்,இரும்புச்சத்து

முளைகட்டிய பயறுகள், தானியங்கள் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. முளைவிட்ட கொண்டைக் கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டைக் கடலையில் உள்ளன.

உளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலியைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளும் முளைகட்டிய உளுந்தை சாப்பிடுவது நல்லது. தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.

sprouted cereal,health,protein,potassium,iron ,முளைகட்டிய தானியம்,ஆரோக்கியம்,புரோட்டீன்,பொட்டாசியம்,இரும்புச்சத்து

கொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துகள் கிடைக்கும். இது கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன் போன்றவற்றைச் சரிசெய்ய உதவும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறைச் சாப்பிடுவது நல்லது.

முளைகட்டிய பச்சைப் பயறைச் சாப்பிட்டால், அதிகப் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவு. அல்சரைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி தரும்.

Tags :
|