Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வலி, தசைப்பிடிப்பு போன்றவை வராமல் பார்த்துக்கொள்ள உதவும் சில உடற்பயிற்சிகள்

வலி, தசைப்பிடிப்பு போன்றவை வராமல் பார்த்துக்கொள்ள உதவும் சில உடற்பயிற்சிகள்

By: Karunakaran Wed, 28 Oct 2020 11:49:10 AM

வலி, தசைப்பிடிப்பு போன்றவை வராமல் பார்த்துக்கொள்ள உதவும் சில உடற்பயிற்சிகள்

இயற்கையாகவே புது ரத்த நாளங்கள் உருவாக தூண்டுகோலாக இருப்பது தொடர்ந்து செய்து வரும் உடற்பயிற்சியே. உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு அது உங்கள் உடல் நலத்துக்கு உகந்ததா? என தெரிந்துகொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி என்பது மனித உடலில் பல்வேறு பாகங்களை சீராக இயங்க வைக்க உதவும் சக்தியாகும். முக்கியமாக தசைகளை வலுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கை, கால், மார்பு, வயிறு, கழுத்து என்று உடலின் அனைத்து தசைகளையும் வலி, தசைப்பிடிப்பு போன்றவை வராமல் பார்த்துக்கொள்ள தொடர்ந்து சில உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

exercises,pain,muscle cramps,muscles , உடற்பயிற்சி, வலி, தசைப்பிடிப்பு, தசைகள்

இருதய நோய், ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஏனெனில் முறைப்படி உடற்பயிற்சி செய்ய தவறினால் உடற்பயிற்சியே சிலருக்கு ஆபத்தை விளைவித்துள்ளதையும் அனுபவத்தில் பார்க்கலாம்.

உடற்பயிற்சி செய்வது, ஆற்றல் வளர்சிதை மாற்றம், இனப்பெருக்க செயல்முறைகள், திசு வளர்ச்சி, நீரேற்றம் அளவுகள், தசை புரதத்தின் தொகுப்பு மற்றும் சீரழிவு மற்றும் மனநிலை உள்ளிட்ட பல உடலியல் எதிர்வினைகளை ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. புதிய தசையை உருவாக்குவதற்கும், கொழுப்பை எரிக்க உதவுவதற்கும் ஹார்மோன்கள் பொறுப்பாகும்.

Tags :
|