Advertisement

புற்று நோய் வராமல் தடுக்கும் பப்பாளி!!

By: Monisha Tue, 01 Sept 2020 3:33:34 PM

புற்று நோய் வராமல் தடுக்கும் பப்பாளி!!

பப்பாளியில் வைட்டமின் எ, வைட்டமின் சி,பொட்டாசியம், செம்பு, நார்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பீட்டா கரோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 100gm பப்பாளியில் 43 கலோரிகள் மட்டுமே உள்ளன. மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த சத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது. அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது.

குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண் பார்வை கோளாறு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் போலிக் ஆசிட்(folic acid) அதிகமாக உள்ளது. ஆகையால் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. பெண்கள் இதை உண்பதால் மாத விலக்கு சீராகும்.

vitamin a,vitamin c,potassium,cancer,papaya ,வைட்டமின் எ,வைட்டமின் சி,பொட்டாசியம்,புற்று நோய்,பப்பாளி

ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும். இப்பழத்தை தினமும் உண்பதால் நரம்பு தளர்ச்சி குறையும். கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய உகந்தது. காலை உணவில் பப்பாளியை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டால் உடல் கழிவுகளை வெளியேற்றும். மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தீர்க்கும்.

உடல் எடை அதிகரித்து காணப்படுபவர் பப்பாளி பழத்தை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும். 4 வாரங்கள் தொடர்ந்து இப்பழத்தை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். இந்த காயை சமைத்து உண்பதாலும் உடல் பருமன் குறையும். அதிகமான பருப்பு உணவை உண்ட பிறகு, இரண்டு பப்பாளித்துண்டுகளச் சாப்பிட்டால், நன்றாக செரிமானமாகி விடும்.

Tags :
|