Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பூசணி விதைகளை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஏராளமான பலன்கள்

பூசணி விதைகளை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஏராளமான பலன்கள்

By: Nagaraj Tue, 15 Nov 2022 10:42:59 PM

பூசணி விதைகளை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஏராளமான பலன்கள்

சென்னை: நம்முடைய உடலுக்கு பூசணி விதைகள் ஆரோக்கியமானது என்பதற்கு பல காரணங்கள் உண்டு. இதனை நாம் ஒவ்வொரு முறை எடுத்துக்கொள்ளும்போதும், நமக்கு 151 கலோரிகள் (30 கிராம்) கிடைக்கின்றன. இதனில் அதிகளவிலான புரதச்சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.


வேறு என்னவெல்லாம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதனை தெரிந்து கொள்வோம்.

நார்ச்சத்து: 1.5 கிராம்

கார்போஹைட்ரேட்: 2.10 கிராம்

புரதச்சத்து: 3.70 கிராம்

கொழுப்பு: 6.80 கிராம்

சர்க்கரை: 0.20 கிராம்

pumpkin seeds,potassium,folate,vitamin b,body weight ,பூசணி விதைகள், பொட்டாசியம், போலேட், வைட்டமின் பி, உடல் எடை

பூசணிவிதையில் சிறந்த அளவிலான ஆக்சிஜனேற்ற பண்பும், நிறைவுறா பல கொழுப்பு அமிலங்களும், பொட்டாசியமும், வைட்டமின் B யும், போலேட்டும் உள்ளது. இதனோடு சேர்த்து, பல ஆரோக்கிய பலன்களை அளிக்கும் தாவர கலவைகளும் உள்ளன.

பூசணி விதைகளை சாப்பிடுவதால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. இதனை ஸ்நாக்ஸ் ஆக நாம் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்க உதவும். இது நம்முடைய உடல் கொழுப்பை எரிக்க உதவுவதோடு, தசைகளை கட்டமைக்கவும் உதவுகிறது. இவை நிறைவுற்றவை. மேலும் துத்தநாகம் மற்றும் கால்சியம், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.


நார்ச்சத்து நம்முடைய செரிமான மண்டலத்துக்கு உதவுகிறது. இதனால், நமக்கு உண்டாகும் பசியையும் குறைக்கக்கூடியது. வயிறு முட்ட சாப்பிடாமல் இருக்க இது நமக்கு உதவி செய்கிறது. எனவே எடையை இழப்பதென்பது நமக்கு எளிதாகிறது. துத்தநாகம் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் நாம் எடையை இழப்பதோடு, எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தையும் பெறுகிறோம்.

Tags :
|