Advertisement

ஆரோக்கியமான பாகற்காய் சாலட் செய்வது எப்படி?

By: Monisha Thu, 30 July 2020 6:27:48 PM

ஆரோக்கியமான பாகற்காய் சாலட் செய்வது எப்படி?

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது பாகற்காய். இன்று பாகற்காய் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பாகற்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
ப.மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கு

health,diabetes,bitter gourd salad,onions,tomatoes ,ஆரோக்கியம்,சர்க்கரை நோயாளி,பாகற்காய் சாலட்,வெங்காயம்,தக்காளி

செய்முறை
பாகற்காயை நன்றாக கழுவி தண்ணீரை நன்றாக வடித்து விட்டு விரும்பியபடி வெட்டி கொள்ளவும். ஆனால் மெலிதாக வெட்ட வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாகற்காய், வெங்காயம், தக்காளி, ப. மிளகாய், எலுமிச்சைசாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது சுவையான பாகற்காய் சாலட் ரெடி.

Tags :
|
|