Advertisement

சூப்பர் சுவையில் வெள்ளை பூசணி குழம்பு செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Sun, 26 Nov 2023 5:09:03 PM

சூப்பர் சுவையில்  வெள்ளை பூசணி குழம்பு செய்வோம் வாங்க!!!

சென்னை: உங்கள் வீட்டில் வெள்ளை பூசணி உள்ளதா? அப்படியானால் கர்நாடகா உடுப்பி ஸ்டைலில் வெள்ளை பூசணி குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: * வெள்ளை பூசணி - 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) * மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * எண்ணெய் - தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு... * வரமிளகாய் - 4 * துருவிய தேங்காய் - 1/2 கப் * வெந்தயம் - 1/2 டீஸ்பூன் * சீரகம் - 1/2 டீஸ்பூன் * மல்லி - 2 டீஸ்பூன் * வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன் * புளிச்சாறு - 1 கப் தாளிப்பதற்கு... * எண்ணெய் - 1 டீஸ்பூன் * கடுகு - 1/2 டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிது * வரமிளகாய் – 1

white pumpkin,turmeric powder,salt,oil,chillies,coconut ,வெள்ளை பூசணி, மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய், வரமிளகாய், தேங்காய்

செய்முறை: முதலில் வெள்ளை பூசணியை குக்கரில் போட்டு, அதில் சிறிது நீரை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி கிளறி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் புளியை சுடுநீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், வெந்தயம், சீரகம், மல்லி, எள்ளு விதைகள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய், வெல்லத்தை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். * பிறகு விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, புளி நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதை அப்படியே தயாரித்து வைத்துள்ள குழம்புடன் சேர்த்து கிளறினால், சுவையான உடுப்பி ஸ்டைல் வெள்ளைப் பூசணி குழம்பு தயார்.

Tags :
|
|