Advertisement

குழந்தைகளும் விரும்பி சாப்பிட ரவா போண்டா செய்து கொடுங்கள்

By: Nagaraj Sun, 26 Nov 2023 5:07:43 PM

குழந்தைகளும் விரும்பி சாப்பிட ரவா போண்டா செய்து கொடுங்கள்

சென்னை: ரவையைக் கொண்டு போண்டா செய்யுங்கள். இந்த ரவா போண்டா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

தேவையான பொருட்கள்: * ரவை - 1 கப் * கோதுமை மாவு - 1/4 கப் * உப்பு - சுவைக்கேற்ப * சீரகம் - 1 டீஸ்பூன் * பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) * இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன் * சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன் * வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) * கொத்தமல்லி - 1/2 கப் * தயிர் - 1/2 கப் * பேக்கிங் சோடா - 1 சிட்டிகை * தண்ணீர் - தேவையான அளவு

semolina,wheat flour,salt,cumin,green chillies,ginger paste ,ரவை,  கோதுமை மாவு, உப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி பேஸ்ட்

செய்முறை: முதலில் ஒரு பௌலில் ரவை மற்றும் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி பேஸ்ட், சில்லி ப்ளேப்ஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் சிறிது நீரையும் சேர்த்து போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அந்த போண்டா மாவை 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைக்கும் போது ரவை ஊறி உப்பி வரும். அதன் பின் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி அல்லது ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரவா போண்டா தயார்.

இந்த போண்டாவை அப்படியே சாப்பிடலாம். இல்லாவிட்டால் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் ஆகியவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Tags :
|
|