Advertisement

கேரட் கீர் அருமையான முறையில் செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Tue, 28 Nov 2023 10:11:44 AM

கேரட் கீர் அருமையான முறையில் செய்வோம் வாங்க!!!

தித்திப்பான, ஆரோக்கியம் நிறைந்த கேரட் கீர் செய்ய 15 நிமிடங்களே போதுமானது. வீட்டிற்கு திடீரென விருந்தினர் வந்தால் இந்த கீர் செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்: கேரட் - 3 பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி பால் - அரை கப் பாதாம் பருப்பு - 10 சர்க்கரை - கால் கப் + 2 மேசைக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை

carrot curd,padam,sugar,almond poutine,milk,salt ,கேரட் கீர், பதம், சர்க்கரை, பாதாம் பவுடன், பால், உப்பு

செய்முறை: கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும். கீர் திக்கான பதம் வந்தவுடன் அதை இறக்கி சூடாகவோ, பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாகவோ குடிக்கலாம். இப்போது சூப்பரான கேரட் கீர் ரெடி.

Tags :
|
|
|