Advertisement

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பிடி கொழுக்கட்டை செய்முறை

By: Nagaraj Wed, 29 Nov 2023 5:32:24 PM

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பிடி கொழுக்கட்டை செய்முறை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
*இடியப்ப மாவு - 2 கப்*தண்ணீர் - 2 கப்*உப்பு - 1/2 ஸ்பூன்

தாளிக்க
*தே.எண்ணை - 3 ஸ்பூன்*கடுகு - 1/2 ஸ்பூன்*கடலை பருப்பு - 2 ஸ்பூன்*சின்ன வெங்காயம் - 10*பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது*கறிவேப்பிலை - 1 இனுக்கு பொடியாக நறுக்கியது*இஞ்சி - 1 மிகச்சிறிய துண்டு பொடியாக நறுக்கியது*தேங்காய் துருவல் - 1/2 கப்*மல்லி இலை - 1 கைப்பிடி பொடியாக நறுக்கியது

pickled pudding,salt,coconut,flour,friends,relatives ,பிடிக் கொழுக்கட்டை, உப்பு, தேங்காய், மாவு, நண்பர்கள், உறவினர்கள்

செய்முறை: தண்ணீரை காயவைத்து பெரிய பெரிய பாத்திரத்தில் குழைக்க ஏதுவாக மாவையும் உப்பும் கொட்டிவைக்கவும். பின் தே.எண்ணையில் தாளிக்க கொடுத்துள்ளவற்றை வரிசையாக தாளித்து பச்சை தேங்காய் துருவலையும் மல்லியிலையையும் மாவில் கொட்டி கொதித்த தண்ணீர் விட்டு மரக்கரண்டியால் கிளற கிளற திரண்டு வரும்..

முழுவதுமாக தண்ணீர் சேர்த்து விடாமல் 3/4 கப் அளவு சேர்த்து போதவில்லையென்றால் கூடுதல் சேர்க்கவும்..பின் கொழுக்கட்டைகளாக கையால் அல்லது அச்சால் பிடித்து இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். இதை நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து அவர்களை மகிழ்விக்கலாம்.

Tags :
|
|