Advertisement

கத்திரிக்காய் எள் மசாலா செய்து பார்த்து இருக்கீங்களா? இதோ செய்முறை!!!

By: Nagaraj Sun, 26 Nov 2023 6:17:03 PM

கத்திரிக்காய் எள் மசாலா செய்து பார்த்து இருக்கீங்களா? இதோ செய்முறை!!!




சென்னை: சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? நீங்கள் எப்போதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரி தான் சைடு டிஷ் செய்வீர்களா? இன்று அந்த சப்பாத்திக்கு அட்டகாசமான மற்றும் வித்தியாசமான சைடு டிஷ் செய்வோமா. உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காயுடன், எள்ளு விதைகளை சேர்த்து ஒரு அட்டகாசமான மசாலாவை செய்யுங்கள்.
இந்த கத்திரிக்காய் எள்ளு மசாலா ஆந்திராவில் பிரபலமானது மற்றும் இதை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: * பெரிய கத்திரிக்காய் - 1 * உப்பு - சுவைக்கேற்ப * சர்க்கரை - 1 டீஸ்பூன் * மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன் * மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் * சீரகத் தூள் - 1 டீஸ்பூன் * புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் * எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வறுத்து அரைப்பதற்கு... * வரமிளகாய் - 4 * எள்ளு விதைக - 2 டேபிள் ஸ்பூன் * பூண்டு - 4 பல்

eggplant,salt,sugar,coriander powder,turmeric powder,cumin powder,tamarind juice ,கத்திரிக்காய்,  உப்பு, சர்க்கரை, மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், புளிச்சாறு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், எள்ளு விதைகள் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் கத்திரிக்காயை நீரில் கழுவி, அதை நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். * அதன் பின் அதில் உப்பு, சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் வாணலியை மூடி வைத்து 10 நிமிடம் கத்தரிக்காயை வேக வைக்க வேண்டும்.

கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் எள்ளு மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். * இறுதியாக புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, 5 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் எள்ளு மசாலா தயார்.

Tags :
|
|