Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வெள்ளை பட்டாணி சுண்டல்

By: Nagaraj Wed, 29 Nov 2023 5:31:18 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வெள்ளை பட்டாணி சுண்டல்

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வெள்ளை பட்டாணி சுண்டல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பச்சை அல்லது வெள்ளை பட்டாணி - ஒரு கப்இஞ்சி - பச்சை மிளகாய்- அரைத்த விழுதுகடுகு - ஒரு தேக்கரண்டிகறிவேப்பிலை - ஒரு கொத்துபெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகைஉப்பு - தேவைக்கேற்பமாங்காய் (பொடியாக நறுக்கினது) - 2 மேசைக்கரண்டி

white chickpeas,baking soda,green chillies,ginger ,வெள்ளை கொண்டைக்கடலை, சமையல் சோடா, பச்சைமிளகாய், இஞ்சித்துண்டு

செய்முறை: பச்சை பட்டாணியை குறிப்பில் உள்ள முறையில் ஊற வைத்து எடுத்து, ப்ரஷர் பானில் ஒரு விசில் வரை வேக வைத்து, வடித்து எடுத்துக் கொள்ளவும். பயறில் இஞ்சி பச்சை மிளகாய் விழுதைச் சிறிது நேரம் பிசறி வைக்கவும்.

வாணலியில் தாளிக்க எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயப் பொடி போட்டுத் தாளித்து, பிசறி வைத்திருக்கும் பயறையும், உப்பையும் போட்டு கிளறி இறக்கவும். இறக்கினவுடன் மாங்காயையும், கொத்தமல்லியையும் சேர்த்துக் கலக்கவும்.

கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு முதலியவற்றைத் தவிர மற்ற பயறுகள் அனைத்தையும், ஒரு கப் பயறுக்கு அரை தேக்கரண்டி சமையல் சோடா என்ற அளவில் போட்டு குறைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும். வேக வைப்பதற்கு முன்பு, நன்கு சோடா போகக் கழுவி விட்டு, பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு ப்ரஷர் குக்கரில் வேகவிடவும்.

ஒரு அங்குல இஞ்சித்துண்டு, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து வெந்த பயற்றில் சிறிது நேரம் பிசறி வைத்து விட்டுத் தாளித்துக் கிளறினால், வாயு உபத்திரவம் இருக்காது. ருசியாகவும் இருக்கும்.

Tags :