Advertisement

மொறு, மொறு சுவையில் செட்டிநாடு முறை மீன் பக்கோடா

By: Nagaraj Tue, 22 Sept 2020 12:56:46 PM

மொறு, மொறு சுவையில் செட்டிநாடு முறை மீன் பக்கோடா

சிக்கன் பக்கோடா, மட்டன் பக்கோடா, வெங்காயப் பக்கோடா, கடலை பக்கோடா என பலவிதங்களில் சாப்பிட்டு இருப்பீர்கள். நாவில் எச்சில் ஊறவைக்கும் மீன் பக்கோடாவினை செட்டிநாடு ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

மீன் – 1/2 கிலோ
கடலை மாவு – ½ கப்
பச்சரிசி மாவு – ¼ கப்
சோள மாவு – 2 டீஸ்பூன்
சோம்புத் தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – 1 துண்டு
மிளகாய்த் தூள்- 2 ஸ்பூன்
பூண்டு- 10 பல்
தக்காளி சாஸ்- 3 ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

green chillies,ginger garlic paste,chilli powder,fish ,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த் தூள், மீன்

செய்முறை: மீனை ஆவியில் வேக வைத்து முள்ளை எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தினை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.

அடுத்து மீன் சதையினை உதிர்த்து அதில் கடலை மாவு, பச்சரிசி மாவு, சோள மாவினைச் சேர்க்கவும். அத்துடன் சோம்பு தூள், பச்சை மிளகாய், இஞ்சி- பூண்டு பேஸ்ட், மிளகாய்த் தூள், உப்பு போட்டு தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.

வழக்கமான பக்கோடாவைப் போல் கையால் மாவை பிசறி, எண்ணெயில் போட்டு பொரிக்கவும். தக்காளி சாஸ் ஊற்றிப் பரிமாறினால், மொறுமொறு செட்டிநாடு மீன் பக்கோடா ரெடி.

Tags :