Advertisement

ருசி மிகுந்த முட்டை வடை செய்யும் முறை

By: Nagaraj Thu, 05 Nov 2020 9:54:37 PM

ருசி மிகுந்த முட்டை வடை செய்யும் முறை

சென்னை: புதுமையான அதே நேரத்தில் ருசி மிகுந்த முட்டை வடை செய்யும் முறை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்

முட்டை - 8
கடலை பருப்பு - 200 கிராம்
சின்ன வெங்காயம்- 150 கிராம்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

eggs,chillies,onions,peas ,முட்டை வடை, மிளகாய், வெங்காயம், கடலை பருப்பு

செய்முறை: கடலை பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து சற்று கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் அரைத்த பருப்பு நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி கடாயில் தேவையான அளவு எண்ணெயை விட்டு சூடானவுடன் ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும்.

வடை ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு நன்கு வெந்தவுடன் சூடாக சாப்பிடவும். அருமையான ருசியாக இருக்கும்.

Tags :
|
|