Advertisement

சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்க!!

By: Monisha Sun, 15 Nov 2020 5:06:12 PM

சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்க!!

சமையலில் அனுபவம் இல்லாதவர்கள் சமைக்கும் போது சில தவறுகளை செய்கின்றனர். இந்த பதிவில் நாம் சமைக்கும் போது செய்ய கூடாத ஒரு சில தவறுகள் குறித்து பார்க்கலாம்.

காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ அல்லது காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவவோ கூடாது. ரசத்தை சமைக்கும் போது அதிகமாக கொதிக்க விடக்கூடாது.

பொதுவாக காபி தயாரிக்கும் போது பாலை அதிகம் காயவிடாமல் தயாரிக்க வேண்டும். அப்போது தான் சுவை மிகவும் ருசியாக இருக்கும்.

எந்த உணவுப்பொருளையுமே கழுவாமல் பயன்படுத்த கூடாது. புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பதற்கு முன்பு அதை ஒரு முறை தண்ணீர் சேர்த்து நன்றாக அலசிவிட்டு அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

cooking,coffee,vegetables,potatoes,ginger ,சமையல்,காபி,காய்கறிகள்,உருளைக்கிழங்கு,இஞ்சி

பொதுவாக மோர்க்குழம்பு செய்யும் போது சூடாக இறக்கி நன்றாக சூடு ஆறும் வரை திறந்து வைத்து ஆறிய பின் தான் மூட வேண்டும். நீண்ட நேரம் எந்த உணவையும் வறுக்கவோ மற்றும் பலமுறை மீண்டும் அதே எண்ணையை உபயோகிக்கவோ கூடாது.

காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது அதிக நேரம் வதக்கவும் கூடாது. மேலும் காய்கறிகளோ அல்லது பழங்களோ சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் வெகு நேரத்திற்கு முன்பே அதை நறுக்கி வைக்கக் கூடாது. அதனால் அதன் உயிர்த்தன்மை இழந்து போகும்.

குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும்போது கொத்துமல்லி இலையைப் போடக் கூடாது. அடுப்பில் இருந்து இறங்குவதற்கு முன் ஒரு சில நொடிகள் முன்பு அவற்றை தூவி சமையலை முடிக்கலாம்.

சூடாக இருக்கும் எந்த உணவிலும் எலுமிச்சம் பழம் பிழிந்து விட கூடாது. எந்த உணவிற்கும் தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் உணவுகளை வைத்து சூடுபடுத்தி உண்ணவே கூடாது.

cooking,coffee,vegetables,potatoes,ginger ,சமையல்,காபி,காய்கறிகள்,உருளைக்கிழங்கு,இஞ்சி

வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் ஒன்றாக ஒரே இடத்தில் வைக்கவே கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு, குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. முட்டைகளை நன்கு கழுவிவிட்ட பின் தான் வேக வைக்க வேண்டும்.

எந்த கீரையாக இருந்தாலும் அதை 2 முறையாவது கழுவ வேண்டும். அதே போல் தான் கீரைகளை சமைக்கும் போது அதிகம் மசாலா சேர்க்காமல் மூடாமல் சமைக்க வேண்டும். கீரையோடு புளி சேர்க்கக் கூடாது.

பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. பெரும்பாலும் தாளிக்கும் போது எண்ணெய் குறைவாக இருப்பது நன்று. இஞ்சியை ஒரு போதும் தோலோடு சமைக்கக் கூடாது.

குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெய்யோ நன்றாக காயக்கூடாது. மைக்ரோவேவ் அவனில் சமைப்பது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் அதில் சமைக்கும் உணவுகளுக்கு பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது.

சமைக்கப் பயன்படுத்தும் கரண்டிகள் நீளமாக இருத்தல் வேண்டும். அடுப்பில் வைக்கும் பாத்திரங்களும் சற்று அகலமானதாக இருக்க வேண்டும். இதனால் கை வலி இல்லாமல் கிண்டுவது, வறுப்பது போன்ற சமையல் வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். கேஸ் விரயத்தையும் தடுக்கலாம்.

Tags :
|