Advertisement

அருமையான சுவையில் உருளைக்கிழங்கு சூப் செய்முறை

By: Nagaraj Tue, 27 Oct 2020 11:36 PM

அருமையான சுவையில் உருளைக்கிழங்கு சூப் செய்முறை

இதயம் வலிமைப்பெற உருளைக்கிழங்கு சூப் சாப்பிடுங்கள். இதை அருமையான முறையில் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 1
பால் - அரை டம்ளர்
மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
பால் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

potatoes,onions,salt,maida flour,milk ,உருளைக்கிழங்கு, வெங்காயம், உப்பு, மைதா மாவு, பால்

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி, அதனுடன் வெங்காயம், உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிக்ஸியில் மைதா மாவு, பால், மிளகுத்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரைத்த கலவையை உருளைக்கிழங்கில் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். சூப் கெட்டியாக வரும் வரை கிளறி விடவும். பின்னர் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான உருளைக்கிழங்கு சூப் ரெடி. இது இதயத்தை வலுவாக்கும்.

Tags :
|
|