Advertisement

பச்சை மிளகாயில் காரசாரமான குழம்பு செய்வது பற்றி உங்களுக்காக!!!

By: Nagaraj Mon, 28 Dec 2020 8:42:20 PM

பச்சை மிளகாயில் காரசாரமான குழம்பு செய்வது பற்றி உங்களுக்காக!!!

பச்சை மிளகாய் என்றாலே வெகு தூரம் ஓட்டம் பிடிப்போம். இந்த பச்சைமிளகாயில் அருமையாக குழம்பு செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள் :

பச்சை மிளகாய் - 16
குட மிளகாய் - 2
தக்காளி - 2
சீரகம் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 16
எண்ணெய் - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
புளி - சிறிது
வெந்தயம் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

green chillies,broth,tomatoes,onions,pickles ,பச்சை மிளகாய், குழம்பு, தக்காளி, வெங்காயம், புளிக்கரைசல்

செய்முறை: முதலில் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் . பிறகு புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .

அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் . பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் .

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும் . பின்பு மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும். காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

Tags :
|
|