Advertisement

ஆரோக்கியம் நிறைந்த கம்பு ரவை உப்புமா செய்முறை

By: Nagaraj Sun, 06 Sept 2020 09:06:11 AM

ஆரோக்கியம் நிறைந்த கம்பு ரவை உப்புமா செய்முறை

சிறுதானிய வகையை சேர்ந்த கம்பு புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகளைக் கொண்டதாக உள்ளது, இந்த சத்துமிக்க கம்பினைக் கொண்டு உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:


கம்பு ரவை - 1 கப்
வெங்காயம் - 1
வரமிளகாய் - 2
இஞ்சி - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கேரட் - 1
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

rye semolina,salt,onion,carrot,peanuts ,கம்பு ரவை, உப்பு, வெங்காயம், கேரட், கடலைப்பருப்பு

செய்முறை: வெங்காயம் மற்றும் கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கம்பு ரவையை கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து பொருங்காயத்தூள், வரமிளகாய், இஞ்சி, வெங்காயம், கேரட் சேர்த்து வதக்கவும்.

பின்னர் தண்ணீர், உப்பு, கம்பு ரவை சேர்த்து வேகவிட்டு இறக்கினால் இப்போது சுவையான கம்பு ரவை உப்புமா ரெடி. மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது.

Tags :
|
|
|