Advertisement

சுவையான பீட்ரூட் பாயசம் செய்வது எப்படி?

By: Monisha Tue, 27 Oct 2020 11:13:56 AM

சுவையான பீட்ரூட் பாயசம் செய்வது எப்படி?

பீட்ரூட் மிகவும் இனிப்பு சுவையுடைய காய்கறி. இதை கொண்டு பொரியல் மட்டுமல்லாமல் பலவகையான உணவு வகைகளை தயாரித்து சாப்பிடலாம். இந்த பதிவில் பீட்ரூட் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பீட்ரூட் – மூன்று
பால் – 1/4 லிட்டர்
சீனி – தேவையான அளவு
நெய்
ஏலக்காய்
முந்திரி

beetroot,milk,sugar,ghee,cardamom ,பீட்ரூட்,பால்,சீனி,நெய்,ஏலக்காய்

செய்முறை
முதலில் பீட்ரூட்டை நன்கு தோல் சீவி அதை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அடித்து வைத்து கொள்ளுங்கள். அதன்பின் பாயசம் செய்ய பயன்படுத்தும் பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். நெய் சூடானதும் அதில் முந்திரி பருப்பு சேர்த்து சிவப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும்.

பின்பு அதில், அரைத்த வைத்திருக்கும் பீட்ரூட் சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பின் அதில் சிறிதளவு கூட நெய் சேர்த்து அனைத்து பொருட்களையும் குறைவான தீயில் சமைக்கவும். 5 முதல் 7 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு கப் பால் சேர்த்து அவற்றை பத்து நிமிடங்களுக்கு நன்கு காய விடுங்கள்.

தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து நன்கு கிளறி கொடுங்கள். அதன்பின் சிறிதளவு ஏலக்காய் சேர்த்துக் கொடுங்கள். பீட்ரூட் நன்கு வெந்து நிறத்தில் சின்ன மாற்றம் தெரிந்ததும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். சர்க்கரை சேர்த்தப்பிறகு 5 நிமிடங்களுக்கு காய விடுங்கள். அதன் பின் இதில் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கி இறக்கினால் போதும். இப்போது சுவையான பீட்ரூட் பாயசம் ரெடி.

Tags :
|
|
|