Advertisement

செட்டிநாடு ஸ்டைலில் சுவையான பனீர் பட்டாணி செய்வது எப்படி?

By: Monisha Thu, 22 Oct 2020 5:58:43 PM

செட்டிநாடு ஸ்டைலில் சுவையான பனீர் பட்டாணி செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்டைலில் சுவையான பனீர் பட்டாணி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பனீர் -100 கிராம்
ஃப்ரெஷ் பச்சை பட்டாணி வேக வைத்தது - 50 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 150 கிராம்
நறுக்கிய தக்காளி - 75 கிராம்
பூண்டு - 25 கிராம்
கரம் மசாலா - 20 கிராம்
நீள காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 10 கிராம்
சோம்பு - 10 கிராம்
செட்டிநாடு டிரை மசாலா பொடி - 30 கிராம்
தக்காளி ப்யூரி - 5ஷீ மிலி
இஞ்சி பூண்டு விழுது - 20 கிராம்
உப்பு -சுவைக்கேற்ப
மிளகு தூள் - 20 கிராம்
நல்லெண்ணெய் - 20 கிராம்
ரீஃபைண்டு ஆயில் - 40 கிராம்
தேங்காய் பால் - 50 மிலி

paneer,green peas,onions,tomatoes,garlic ,பனீர்,பச்சை பட்டாணி,வெங்காயம்,தக்காளி,பூண்டு

செய்முறை
பனீரை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பன்னீரை எண்ணெயில் பொரித்து ஓரமாக வைத்து விடவும். எண்ணெயை சூடாக்கி, அதில் காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். பூண்டு வெங்காயம் ஆகியவற்றை அதே பாத்திரத்தில் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ப்யூரி, நறுக்கிய தக்காளிகள் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மொத்த கலவையையும் தண்னீரால் மூழ்கும் வரை தண்ணீர் சேர்க்கவும். மிளகாய் தூள் மற்றும் செட்டிநாடு மசாலா பவுடரை அதில் சேர்க்கவும். மசாலா வாசம் மாறியவுடன் குறைந்த தீயில் வேக வைக்கவும்.

பனீர் மற்றும் பச்சை பட்டானி ஆகியவற்றை கிரேவியில் சேர்க்கவும் கடைசியாக தேங்காய் பாலை ஊற்றி முடிக்கவும். கொத்தமல்லியை அலங்காரமாகச் சேர்த்து பரிமாறவும்.

Tags :
|
|