Advertisement

சுவையான அரிசி முறுக்கு செய்வது எப்படி?

By: Monisha Thu, 24 Sept 2020 3:41:18 PM

சுவையான அரிசி முறுக்கு செய்வது எப்படி?

பலகார வகைகளில் முறுக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது. இன்று நாம் சுவையான அரிசி முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்கள்
உளுந்து மாவு -1/2 கப்
வறுத்த கடலை மாவு/பொட்டுக்கடலை மாவு - 3/4 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துளி
உருக்கிய நெய் - 1 தேக்கரண்டி
சூடான எண்ணெய் - 1 தேக்கரண்டி
சுவைக்கேற்ப உப்பு
பொரிப்பதற்கு எண்ணெய்
முறுக்கு அச்சு

flavor,rice murukku,rice flour,ghee,oil ,சுவை,அரிசி முறுக்கு,அரிசி மாவு,நெய்,எண்ணெய்

செய்முறை
ஒரு பாத்திரத்தில், உளுந்தை வறுக்கவும், லேசாக நிறம் மாறும் வரை வறுத்தால் போதும். அதிகமாக வறுக்க கூடாது. அதை பாத்திரத்தின் சூட்டில், உடைத்த கடலையை வறுக்கவும். அது உலர்ந்தவுடன், இரண்டையும் தனித்தனியாக பவுடராக அரைத்து சலித்துக் கொள்ளவும். மீதமுள்ள பொடியை மீண்டும் அரைத்து, சலிக்கவும். அரிசி மாவை சலிக்கவும்.

ஒரு பாத்திரத்தில், அரிசி மாவு, உளுந்து மாவு மற்றும் பொட்டுக் கடலை மாவு ஆகியவற்றை விரல்களைப் பயன்படுத்தி, ஒன்றாக கலக்கவும். சீரகம், நெய், சூடான எண்ணெயை ஒன்றாக சேர்த்து ஒரு பாத்திரத்தில் கலக்கவும். கூடவே உப்பு, அரை கப் தண்ணீரையும் சேர்த்து கலக்கவும். (இதன் மூலம், உப்பு மாவுடன் முழுமையாக கலக்கும்). உப்பிட்ட தண்ணீருடன், மேலும் தண்ணீரை சேர்த்து, மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துப் பிசையவும். முறுக்கு சுடும் பதத்திற்கு மாவை பிசைந்தவுடன், தண்ணீரைச் சேர்ப்பதை நிறுத்தி விடலாம். அதிகமான தண்ணீரை சேர்க்காதீர்கள், இல்லையென்றால், அச்சில் பிழியும்போது முறுக்கு உடைந்துவிடும். மாவை சுவை பார்த்து, உப்பின் அளவை சோதிக்கவும்.

மாவை முறுக்கு அச்சில் வைத்து, அழுத்தி சோதிக்கவும். மிகவும் கடினமாக இருந்தால், 2 அல்லது 3 துளி தண்ணீரை சேர்த்து, நன்றாக பிசைந்து பின்னர் பயன்படுத்தலாம். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பின்பு எண்ணெய் சூடானவுடன், தீயைக் குறைக்கவும். அதில் முறுக்கை கரண்டியிலிருந்து சறுக்கி விடவும். முறுக்கை சூடான எண்ணெயில் விட்டவுடன், ஒரு சில நொடிகள் அதை பொரிக்க விட்டு, பிறகு அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடவும். பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். முறுக்கு தயாரானவுடன், ஜல்லி கரண்டியில் முறுக்கை எடுத்து, பேப்பர் டவலில் வைக்கவும். இதனால் அதிகமான எண்ணெயை அகற்றலாம்.

Tags :
|
|