Advertisement

ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்கீரை சாம்பார் செய்வது எப்படி?

By: Monisha Sat, 28 Nov 2020 12:33:48 PM

ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்கீரை சாம்பார் செய்வது எப்படி?

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரையை கொண்டு சூப்பர் சுவையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
துவரம் பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப்
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
புளி - 100 கிராம்
கடுகு, வெந்தயம் - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
வெந்தயக்கீரையை ஆய்ந்து இலைகளை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி தனியே வைக்கவும். புளியைக் கரைத்து கடாயில் விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, பிறகு வதக்கிய வெந்தயக் கீரையை சேர்த்து, மேலும் கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்க்கவும். எல்லாம் கலந்து கொதித்த உடன் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும். ஆரோக்கியம் நிறைந்த சுவையான வெந்தயக்கீரை சாம்பார் தயார்.

Tags :
|
|
|