Advertisement

நார்ச்சத்து நிறைந்த கிவி பழத்தில் சாண்ட்விச் செய்வது எப்படி??

By: Monisha Wed, 15 July 2020 5:48:36 PM

நார்ச்சத்து நிறைந்த கிவி பழத்தில் சாண்ட்விச் செய்வது எப்படி??

கிவிப் பழத்தில் உள்ள டயட்டரி நார்ச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி புரிந்து இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும். இந்த கிவிப் பழத்தில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்
கிவி - 2
கோதுமை பிரெட் - 3
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தேன் அல்லது நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்.

செய்முறை
கிவி பழத்தை தோலுரித்து வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கோதுமை பிரெட்டில் வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும். கிவி பழத்துண்டுகளை பொடித்த நாட்டு சர்க்கரை அல்லது தேன் தடவி வைக்கவும். தட்டில் ஒரு பிரெட்டை வைத்து அதன் மேல் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து அதன் மேல் இன்னொரு பிரெட் வைத்து மூடி அதன் மேல் இன்னும் மூன்று கிவி பழத்துண்டுகளை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும். சூப்பரான சத்தான கிவி பிரெட் சாண்ட்விச் ரெடி.

Tags :
|
|