Advertisement

கோதுமை தோசை ரெம்ப சுவையாக செய்வது எப்படி?

By: Monisha Mon, 21 Dec 2020 2:24:12 PM

கோதுமை தோசை ரெம்ப சுவையாக செய்வது எப்படி?

கோதுமை மாவில் செய்யும் எளிய ரெசிப்பி தோசை. ஆனால் சப்பாத்தி, பூரி பிடிக்கும் பலருக்கு கோதுமை தோசை பிடிப்பதில்லை. இந்த பதிவில் சுவையாக கோதுமை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முழு கோதுமை மாவு - ஒரு கப்
வெங்காயம் - 1 ( நறுக்கியது)
தயிர் - இரண்டு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு நறுக்கியது,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

wheat dosa,onion,yogurt,chilli,taste ,கோதுமை தோசை,வெங்காயம்,தயிர்,மிளகாய்,சுவை

செய்முறை
முதலில் கோதுமை மாவுடன் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். பிறகு உப்பு சேர்த்து, மாவை ஓரிரு மணி நேரங்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும், தேவையென்றால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் வழக்கம்போல தோசைக் கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வழக்கமான தோசை ஊற்றுவது போல் ஊற்றவும். இப்படி சுட்டு எடுத்தால், தயிர் மிக்ஸான சுவையான மொறு மொறு கோதுமை தோசை ரெடி. தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து சாப்பிட்டால், இந்த கோதுமை தோசை சூப்பராக இருக்கும்.

Tags :
|
|
|