Advertisement

அனைவருக்கும் விருப்பமான கொத்தவரங்காய் கூட்டு செய்வது எப்படி?

By: Monisha Tue, 06 Oct 2020 11:10:19 AM

அனைவருக்கும் விருப்பமான கொத்தவரங்காய் கூட்டு செய்வது எப்படி?

தென் மாவட்டங்களில் கொத்தவரங்காயை சீனி அவரக்காய் என்றும் சொல்வார்கள். இது பெரியர்வர்களுக்கு மட்டுமல்ல சிறியவர்களுக்கும் பிடிக்கும். இன்று நாம் சுவையான கொத்தவரங்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை தேவைக்கு ஏற்ப அளவு வைத்துக்கொள்ளவும்

கொத்தவரங்காய்
வெங்காயம்
தக்காளி
பூண்டு
கடுகு
கடலைபருப்பு
உளுத்தம்பருப்பு
எண்ணெய்
உப்பு
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய்
புளி (தேவைப்பட்டால்)

kothavarangai,onion,tomato,garlic,peanuts ,கொத்தவரங்காய்,வெங்காயம்,தக்காளி,பூண்டு,வேர்க்கடலை

செய்முறை
கொத்தவரங்காயை பொடிபொடியாய் நறுக்கி உப்பு போட்டு வேக விட வேண்டும். பின்னர், அதில் இருக்கும் தண்ணிய வடித்துவிட வேண்டும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊத்தி காயவைக்க வேண்டும். காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை போட்டு பொன்னிறமாக சிவக்க விட வேண்டும். அதன்பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் நசுக்கிய பூண்டை போட்டு வதக்க வேண்டும். அப்புறம், சிறிதாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும். இப்போது, உப்பு சேர்த்தால் சீக்கிரம் வெங்காயம் தக்காளி வெந்துவிடும்.

தக்காளி வெந்ததும் மிளகாய் தூள், மஞ்சத்தூள் சேர்த்து வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் வாசனை போகும்வரை கொதிக்க விட வேண்டும் தேவைப்பட்டசல். புளி தண்ணீர் சேர்த்துக்கலாம். தண்ணீர் சுண்டி வரும் நேரத்தில் வடிகட்டி வச்சிருக்கும் கொத்தவரங்காயை கொட்டி வதக்கவும். தண்ணீர் நல்லா சுண்டியதும் பொடி செஞ்சிருக்கும் வேர்கடலை பொடியை சேர்த்து, சுருள சுருள கிளறி விட வேண்டும். கொத்தவரங்காய் பொரியல் தயார். வேர்கடலையோடு எண்ணெயில் வறுத்தெடுத்த காய்ந்த மிளகாயை சேர்த்து பொடி செய்தும் போடலாம்.

Tags :
|
|
|