Advertisement

குழந்தைகளுக்காக மிக்ஸ்ட் வெஜ் புர்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள்

By: Nagaraj Sat, 13 June 2020 8:19:27 PM

குழந்தைகளுக்காக மிக்ஸ்ட் வெஜ் புர்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள்

மிக்ஸட் வெஜ் புர்ஜி செய்து கொடுங்கள். காய்கறிகள் நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்கும்.

தேவையானவை

நறுக்கிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், காலிஃப்ளவர்) – ஒரு கப்
பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கவும்)
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
கரம் மசாலாத்தூள் – சிறிதளவு
பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் – தேவையான அளவு
மல்லித்தூள்– ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.


vegetables,cauliflower,curry leaves,onions. ,காய்கறிகள், காலிஃப்ளவர், கறிவேப்பிலை, வெங்காயம்.

செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு காய்கறிகள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த மிக்ஸ்டு வெஜிடபிள் புர்ஜி ரெடி.

Tags :