Advertisement

அசைவ உணவு பிரியர்களுக்காக ஸ்பெஷல் ரெசிப்பி!

By: Monisha Tue, 15 Dec 2020 5:06:09 PM

அசைவ உணவு பிரியர்களுக்காக ஸ்பெஷல் ரெசிப்பி!

அசைவ உணவு பிரியர்களுக்காக இன்று புது வகையில் ரவா மீன் ப்ரை செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்
வஞ்சர மீன் - 8 துண்டுகள்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 5 இலைகள்
வரமிளகாய் - 5
மல்லி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கசகசா - 1 டீஸ்பூன்
ஓமம் - 1 சிட்டிகை
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - 1/2 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
ரவை - 1 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

fish,lemon,chilli,garlic,semolina ,மீன்,எலுமிச்சை,மிளகாய்,பூண்டு,ரவை

செய்முறை
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர் வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சீரகம் மற்றும் மல்லி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை ஃப்ரிட்ஜில் உள்ள மீனில் நன்கு தடவி, மீண்டும் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீனை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, அதில் உள்ள ப்ளேவர் எண்ணெய்யில் இறங்கும் வரை சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

பின் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, ரவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா மீன் ப்ரை ரெடி!

Tags :
|
|
|
|