Advertisement

சுவையும், நார்ச்சத்தும் நிறைந்த இனிப்பு சோள சுண்டல்

By: Nagaraj Fri, 17 July 2020 10:50:11 AM

சுவையும், நார்ச்சத்தும் நிறைந்த இனிப்பு சோள சுண்டல்

சுவையும், நார்ச்சத்தும் நிறைந்த இனிப்பு சோள சுண்டல் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கடைகளில் விதவிதமான சோள வகைகள் கிடைக்கின்றன. கண்ணைப் பறிக்கும் விதங்களில் பார்த்ததும் வாங்கத்தூண்டும் இந்த சோள வகைகள் பெயரளவில் வெவ்வேறாக இருந்தாலும் இவற்றைச் சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாகக் கிடைக்கும். சுலபமாகச் செய்யக்கூடிய இந்த இனிப்புச் சுண்டல் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தேவையானவை:


வெள்ளை சோளம் - கால் கப் (ஆறுமணிநேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ள வேண்டும்)
அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - கால் கப் (வேக வைத்தது)
பேபி கார்ன் - கால் கப் (வேகவைத்து, சிறு துண்டுகளாக நறுக்கியது)
உலர்திராட்சை,
பேரீச்சை- தலா 2 டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி - ஒரு டேபிள்ஸ்பூன்
பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (பனீரை வெந்நீரில் போட்டு எடுத்து துருவிக்கொள்ளவும்)
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
நாட்டுச் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
உலர் மிக்ஸ்டு விதைகள் - ஒரு டேபிள்ஸ்பூன்
தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்

fiber,sweet corn,chickpeas,sugar ,நார்ச்சத்து, இனிப்பு சோளம், சுண்டல், நாட்டுச்சர்க்கரை

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் வாய் அகன்ற பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டுக் கிளறி, சிறிய பவுலுக்கு மாற்றிப் பரிமாறவும். இதில் நார்ச்சத்து அதிகளவு உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை உயர்த்தும்.
இனிப்புடன் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களும் ருசித்து சாப்பிடலாம். மாலை நேரத்தில் அருமையான சிற்றுண்டியாக இது அமையும்.

Tags :
|