Advertisement

செம ருசியில் தயிர் கத்தரிக்காய் கிரேவி செய்முறை

By: Nagaraj Mon, 21 Sept 2020 09:58:34 AM

செம ருசியில் தயிர் கத்தரிக்காய் கிரேவி செய்முறை

செம ருசியில் தயிர் கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4
தனியா தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

yogurt,eggplant,tomatoes,gravy,ginger,garlic ,தயிர், கத்திரிக்காய், தக்காளி, கிரேவி, இஞ்சி, பூண்டு

செய்முறை: முதலில் தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். பின் வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கத்தரிக்காயை சுருங்க வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

பின் அதே எண்ணெயில் கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளுங்கள். வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அரைத்த தக்காளி விழுது சேர்த்துக்கொள்ளுங்கள். தக்காளி வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து வதக்குங்கள்.

பின் தயிர் சேர்த்து வதக்குங்கள். தற்போது வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். கால் கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் தயிர் கத்தரிக்காய் கிரேவி தயார்.

Tags :
|
|
|